உரை |
|
3. மகத காண்டம் |
|
8. பாங்கர்க் குரைத்த |
|
கோதை யாயம் பரவ
வேறித்
திருமலர் வீதி போதந் தெதிர்மலர்க்
35 காவினுட் பொலிந்த வோவக்
கைவினைக்
கண்ணார் மாட நண்ணுவன
ளிழிந்து
தேனிமிர் படலைத் திருவமர்
மார்பனைத்
தானினி தெதிர்ந்த தானத்
தருகே அன்று
மவாவி நோக்கின ணன்றியல் |
|
பதுமாபதியின் செயல் 33-39;
கோதை.........நோக்கினள் |
|
(பொழிப்புரை) பதுமாபதி தோழியர்
வாழ்த்த அவ்வண்டியிலேறிச் செல்வம் மிகாநின்ற வீதியிலே சென்று எதிரே
யமைந்த பூம்பொழிலிலே ஓவியத் தொழிலமைந்த கண்ணுக்கு நிரம்பிய அழகுடைய
கோயில் மாடத்தின்கண் வண்டியினின்றும் இறங்கி வண்டு முரலும் தழைவிரவிய
மலர்மாலையையுடைய திருமகள் உறைகின்ற மார்பினையுடைய அப்
பார்ப்பனமகனைத் தான் முதனாள் கண்ணுற்ற இடத்தே அற்றை நாளும்
வேணவாவோடும் நோக்கினள் என்க. |
|
(விளக்கம்) கோதை-பதுமாபதி. ஆலயத்திற்கு அடையாக்கினுமாம். திரு-செல்வம். ஓவம் -
ஓவியம். தேன் - வண்டு. தானம் - இடம் அவரவி - விரும்பி. |