பக்கம் எண் :

பக்கம் எண்:123

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
           அன்று மவாவி நோக்கின ணன்றியல்
     40    இருவரு மியைந்து பருவரல் காட்டிப்
           புறத்தோர் முன்னர்க் குறிப்புமறைத் தொடுக்கிக்
           கருங்கண் டம்மு ளொருங்குசென் றாட
           வந்தும் பெயர்ந்து மன்றைக் கொண்டும்
           காலையும் பகலு மாலையும் யாமமும்
     45    தவலருந் துன்பமொடு கவலையிற் கையற்
           றைந்நாள் கழிந்த பின்றைத் தன்மேல்
 
         (உதயணன் பதுமாபதியாகிய இருவர்செயலும்)
           39 - 46; நன்றியல்..,.....,பின்றை
 
(பொழிப்புரை) ஒருவரை ஒருவர் காணுதலை விரும்பி
  நன்கனம் வந்து கூடிய பதுமாபதியும் உதயணனும் ஆகிய இருவரும்
  ஓரிடத்தே பொருந்தித் தத்தம் பிரிவுத்துன்பத்தை ஒருவருக்கொருவர்
  உணர்த்தி அயலோர்க்குப் புலப்படாமல் தத்தம் காமக்குறிப்பைத் தத்தம்
  நெஞ்சினுள்ளேயே, அடக்கி   மறைத்துக் கொண்டு இருவருடைய கரிய
  விழிகளும் ஒன்றுபட்டுச் சுழல இவ்வாறே அற்றைநாள் தொடங்கி
  இருவரும் ஓரிடத்திற்கு வந்தும் மீண்டு சென்றும் ஒவ்வொரு நாளும்
  காலையும் கடும் பகலும் மாலையும் யாமமும் என்னும் எல்லாப்
  பொழுதுகளிலும் தவிர்த்தற்கரிய துயரத்தோடு கவலையினாலே கையறவு
  கொண்டு ஐந்து நாள்கள் கழிந்த பின்னர் என்க.
 
(விளக்கம்) பருவரல்-துன்பம், இருவர் கண்களும் என்க.
  அன்றைக்கொண்டு-அற்றை நாள்முதலாக.
  கையற்று-செயலற்று.