உரை |
|
3. மகத காண்டம் |
|
8. பாங்கர்க் குரைத்த |
|
றைந்நாள் கழிந்த பின்றைத்
தன்மேல்
இன்னா வெந்நோய் தன்னமர்
தோழிக்
குரைக்கு மூக்கமொடு திருத்தகு
மாதர்
வான்றோய் மண்டபம் வந்தொருங் கேறித் |
|
இதுவுமது 46 - 49 ;
தன்மேல்.......ஏறி |
|
(பொழிப்புரை) மறுநாள் பதுமாபதி
தனக்குண்டாயிருக்கின்ற துயர் செய்யும் காமநோயைத் தன்னைப் பெரிதும்
விரும்பும் உசாஅத்துணைத் தோழிக்குணர்த்தி அறத்தொடு நிற்கும்
ஊக்கத்தோடு திருமகளை ஒத்த அக்கோமகள் வானைத் தீண்டுகின்ற
அக்காமன் கோயில் மாடத்தே தோழியர்களோடு ஏறி என்க |
|
(விளக்கம்) தன்மேல்
இன்னாவெந்நோய் என்றது, தான் எய்தியிருக்கிற காமநோயை.
தோழிக்குரைத்தல் - அறத்தொடு நிற்றலாம் மண்டபம் - காமன்கோயில்
மண்டபம். |