பக்கம் எண் :

பக்கம் எண்:125

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
     50     தேன்றோய் கோதை சில்லென வுராய்
           இடுகிய கருங்கண் வீங்கிய கொழுங்கவுட்
           குறுகிய நடுவிற் சிறுகிய மென்முலை
           நீண்ட குறங்கி னிழன்மணிப் பல்கலம்
           பூண்ட வாகத்துப் பூந்துகி லல்குல்
     55    அயிரா பதியெனுஞ் செயிர்தீர் கூனியைத்
           தடந்தோண் மாதர் கொடுங்கழுத் தசைஇ
           நின்ற செவ்வியு ளொன்றா ரட்ட
 
           இதுவுமது
    50-57 : தேன்,,,,,,,,.செவ்வியுள்
 
(பொழிப்புரை)    இதுவுமது
    50-57,, தேன்,,,,,,,,.செவ்வியுள்
 
(விளக்கம்) தேனால் நனைந்த மலர்மாலையையுடைய
  அப்பதுமாபதி மெல்ல மெல்லத் தோழியர் குழுவினின்றும்
  பெயர்ந்துபோய்ச் சுருங்கிய கண்களையும் பருத்த வளமான
  கவுளையும் கூனிய இடையினையும் சிறுகிய மெல்லிய 
  முலைகளையும் நீண்ட துடைகளையும் ஒளி மணிபதித்த
  பலவாகிய அணிகலன்களையும், அணிந்த மெய்யினையும்
  அழகிய ஆடையுடுத்த அல்  குலையும் உடையவளாகிய
  அயிராபதி யென்னும் குற்றமற்ற அக்  கூன்ற்றோழியின்பால்
  அடைந்து பெரிய தோளையுடைய அப்பதுமாபதி அவளுடைய
  வளைந்த கழுத்திற் கை வைத்தவளாய்  நின்றபொழுது என்க,