| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 8. பாங்கர்க் குரைத்த |
| |
அந்தண வுருவொடு வந்தவ
ணின்றோன்
யார்கொ லவனை யறிதி
யோவெனப்
பாவை வினவப் பணிந்தவ ளுரைக்கும்
|
| |
(பதுமாபதி அயிராபதியை
வினாதல்) 67 - 69 :
அந்தண..............உரைக்கும்
|
| |
(பொழிப்புரை) பதுமாபதி
அயிராபதியை நோக்கிப் பார்ப்பன உருவத்தோடு அவ்விடத்தே வந்து
நின்றவன் யார்? அவன் இன்னான் என நீ அறிவாயோ? என்று வினவ அயிராபதி
அவளை வணங்கிக் கூறுவாள்; என்க.
|
| |
| (விளக்கம்) பாவை -
பதுமாபதி. அவள் - அயிராபதியை.
|