உரை |
|
3. மகத காண்டம் |
|
8. பாங்கர்க் குரைத்த |
|
70 அடிகள் போக யானு மொருநாள்
ஒடியாப் பேரன் புள்ளத்
தூர்தர ஆண
முடைத்தாக் கேட்டனெ னவனை
மாணக னென்போன் மற்றிந் நாடு
காண லுறலொடு காதலின்
வந்தோன் 75 மறையோம் பாளன்
மதித்தன னாகித்
தானுந் தோழருந் தான நசைஇ
நின்றனர் போகா ரென்றவட்- குரைப்பப் |
|
(அயிராபதியின் விடை) 70 - 77
; அடிகள்...............உரைப்ப |
|
(பொழிப்புரை) 'பெருமாட்டியே!
நாம் காமன் கோயிலுக்கு வந்த முதனாள் அடிகள் காமனை வழிபட்டு
அரண்மனைக்குச் செல்லாநிற்பப் பின்தங்கி ஈண்டு நின்ற யான், அவனை யார்
என்று தெரிந்துகொள்ள அவன்பால் கெடாத பேரன்பு என்
உன்ளத்தே தோன்றி மிகுதலாலே அவ்வன்புடைமை காரணமாக அவனை வினவி
அறிந்துகொண்டேன். அவன் 'மாணகன்' என்னும் பெயருடையன்; நமது
மகதநாட்டைக் கண்டு களித்தல் வேண்டும் என்னும் அவாவினாலே இங்கு
வந்துளான் ; பார்ப்பனன்; நம் நகரத்தை நன்கு மதித்தவனாய் இவனும் இவன்
தோழரும். பெருமாட்டி இக் காம நோன்பின் பொருட்டு வழங்கும் தானப்
பொருளைப் பெற விரும்பி இருக்கின்றனர், ஆதலால் இவர்கள்
நம் காமதேவன் விழா முடியுந்துணையும் இவ்விடத்தினின்றும் போவாரல்லர்?
என்று பதுமாபதிக்குக் கூற என்க |
|
(விளக்கம்) ஒருநாள் என்றது
விழவின் முதனாளை. ஆணம். அன்பு. இந்நாடு-மகதநாடு. .மறையோம்பாளன் -
பார்ப்பனன். நசைஇ - விரும்பி, போதாராய் நின்றனர் என்க.
அவட்கு-பதுமாபதிக்கு. |