உரை |
|
3. மகத காண்டம் |
|
8. பாங்கர்க் குரைத்த |
|
பல்வகை மரபிற் பந்துபுனைந்
துருட்டுதல்
வல்லவன் மற்றவன் கைவயிற் கொண்டது
80 புறத்தோ ரறியாக் குறிப்பி
னுணர்த்தி
நமக்கு வேண்டென நலத்தகை கூறக்
|
|
(பதுமாபதி
அயிராபதியிடம் கூறல்) 78 - 81
; பல்வகை....................கூற
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட பதுமாபதி
'தோழி! இப்பார்ப்பன மகன் பல வேறு வகையினும் பந்துகள் செய்து பல்வேறு
வகையாக உருட்டிப் பந்தாடுதலில் மிகவும். வல்லவன் போலும்! அவன்
இப்பொழுது தன் கையின்கட்கொண்டு உருட்டாநின்ற அவ்வழகிய
பந்தின்கண் என் அவாச் செல்கின்றது; -ஆதலால். பிறர் யாரும் ,
அறியாதபடி என் விருப்பத்தினை அவனுக்குக் குறிப்பாகக் கூறி அப்பந்தினை
நமக்குத் தருமாறு அவனை வேண்டுவாயாக என்று பெண்மை நலமிக்க அப்பெருந்தகைப்
பெண்ணாகிய பதுமாபதி அயிரா பதிக்குக் கூறாநிற்றலாலே
என்க
|
|
(விளக்கம்) உதயணன் பல்வேறு
வகையாகப் பந்தினை உருட்டி ஆடுதலைக் கண்டமையால் அவன் ஆட்டத்தைப்
பதுமாபதி பாராட்டுகிறாள், வாயாற் கூறாமல் கண்ணினும் கையினும்
குறிப்பாலுணர்த்தி என்க.
நலத்தகை-பதுமாபதி.
|