பக்கம் எண் :

பக்கம் எண்:130

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
           கண்ணினுங் கையினுங் கண்ணிய துணர்த்திப்
           பெருந்தகை யண்ண றிருந்துமுக நோக்கி
           நின்கைக் கொண்ட பூம்பந் தென்கை
     85    ஆய்வளைத் தோளிக் கீக்க வென்ன
 
        (அயிராபதி உதயணன்பால் பந்து வேண்டல்)
          82 - 85 : கண்ணினும்..,,.,,,,,,,,,,என்ன
 
(பொழிப்புரை) .அயிராபதி தானும் பெருந்தகைமையுடைய
  தலைவனாகிய உதயணனுடைய திருத்தமுடைய முகத்தை நோக்கித்
  தன் கண்களாலும் கையாலும் பதுமாபதி கருத்தினைக்
  குறிப்பாலுணர்த்தி 'ஐயனே! நின் கையிற் கொண்டுள்ள பூம்பந்தினை
  அழகிய வளையலணிந்த கைகளையுடைய எங்கோமகளுக் குக்
  கொடுத்தற்கு என் கையிற்றருக' என்று குறிப்பிக்க என்க.
 
(விளக்கம்) பதுமாபதி கண்ணியதனைக் கண்ணினுங்
  கையினும்  உணர்த்தி என்க. தோளிக்கு ஈயும் பொருட்டு
  என் கையீக்க என்று குறிப்பால் வேண்ட என்க.
  ஆய்வளைத்தோளி ; பதுமாபதி.