பக்கம் எண்:131
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 8. பாங்கர்க் குரைத்த | |
அங்கை யெற்றிச் செங்கணிற்
காட்டிய
கூன்மகள் குறிப்புத் தான்மனத்
தடக்கித்
தன்வயிற் றாழ்ந்த தைய
னிலைமை
இன்னுயிர்த் தோழர்க் கிசைத்தல் வேண்டி | | (உதயணன் செயல்) 86 - 89
: அங்கை.,,,,,,,,,,,,..வேண்டி | | (பொழிப்புரை) தன் அழகிய கையாற்
புடைத்துக் காட்டிப் பந்தினைக் குறிப்பித்து அதனைப் பதுமாபதிக்கு
அளித்தருள்க என்பதனைத் தனது சிவந்த கண்ணாலே குறிப்பித்த அக்கூன்மகளின்
கருத்தை உதயணன் நன்குணர்ந்துகொண்டு தன்
மனத்திலடக்கியவனாய் இந்நிகழ்ச்சியினால் பதுமாபதி தன்பால்
பெரிதும் விருப்பமுடையவளாயிருக்கின்ற நிலைமையை ஐயமற
அறிந்துகொண்டவனாய் இந்நிலைமையைத் தன் இன்னுயிர்த் தோழராகிய
உருமண்ணுவா முதலியோர்க்கு அறிவித்தலை விரும்பி என்க. | | (விளக்கம்) கூன்மகள்
குறிப்பு - நின் பந்தைப் பதுமாபதி விரும்புகின்றாள்; அதனை அவட்கு
அளித்திடுக என்னும் வேண்டுகோள். |
|
|