பக்கம் எண் :

பக்கம் எண்:135

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
           நெஞ்சுநிறை விட்டன ளாகு மன்றெனின்
           ஈன மாந்த ரொப்ப மற்றிவர்
     115    தான மேற்ற றகாஅ தென்றுதன்
           நுண்மதி நாட்டத்து நோக்கின ளாமது
           திண்மதித் தன்றெனத் திரிந்தவன் மறுப்ப
 
           (இதுவுமது)
       113 - 117 : அன்றெனின்.............மறுப்ப
 
(பொழிப்புரை) 'அங்ஙனமில்லையாயின், பேரழகுடன் விளங்கும்
  நின்னை அவள் ஒரு பார்ப்பன மகன் என்றே மதித்து 'இத்தகைய
  பெருந்தகைத் தோற்றமுடைய இவர் தாமும் ஈனமுடைய
  இரத்தற்றொழிலை யுடையோர் போன்று நம்பால் தான மேற்றல்
  தகாது என்று நின்னிலைக்கு இரங்கி நின்னை ஆராயும் கருத்தோடு
  நின்னை நோக்கினாள் ஆதல் வேண்டும், அங்ஙனமின்றி அவள்
  நின்னைக் காதலித்து நோக்கினள் என்பது உறுதி  யானதொரு
  கருத்தன்று' என்று கூறி அவ்விசைச்சன் உதயணனோடு மாறுபட்டு
  அவன் கூற்றினை மறுப்பவென்க.
 
(விளக்கம்) ஈன மாந்தர் என்றது இரவலரை. நுண்மதி
  நாட்டம் - நுண்ணிய அறிவினது ஆராய்ச்சி, அது நீ கூறியது,
  அஃதாவது, பதுமாபதி என்பாற் காம வேட்கையள் என்றது. திரிந்து
  மாறுபட்டு. அவன் இசைச்சன்.