உரை |
|
3. மகத காண்டம் |
|
8. பாங்கர்க் குரைத்த |
|
ஒருப்பா டெய்தி யுற்றவ
ரெல்லாம்
குறிப்பின் வாரா நோக்கெனக் குருசிற்கு
120 மறுத்த வாயிலொடு வலிப்பன ராக |
|
(மற்றைத் தோழரும்
மறுத்துக் கூறல்) 118 - 120 :
ஒருப்பாடு......வலிப்பனராக |
|
(பொழிப்புரை) இவ்வாறு ஏனைய
உருமண்ணுவா முதலிய தோழர்கள் அனைவரும் தம்முள் ஒருமை உடையராய்
அப் பதுமாபதியின் நோக்கம் காமக் குறிப்பினோடு வாராத
நோக்கமே என்று உதயணனை மறுக்கும் துணிவுடையர் ஆக; என்க. |
|
(விளக்கம்) ஒருப்பாடு -
ஒருமை. உற்றவர் - உருமண்ணுவா முதலியோர். வாராத என்னும் பெயரெச்சத்து ஈறு
கெட்டது. குருசில் ; உதயணன். வலிப்பினர் - துணிவுடையோர்.
|