பக்கம் எண் :

பக்கம் எண்:137

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
           உயிரொன் றாகி யுள்ளங் கலந்தவள்
           செயிரின் றாகிய செங்கடை நோக்கம்
           அணங்கெனக் காயிற் றவட்குமென் னோக்கம்
           அத்தொழி னீர்த்தென வெய்த்தன னென்ன
     125    உரைப்பத் தேறா வுயிர்த்துணைத் தோழரைத்
           திருச்சேர் மார்பன் றேற்றுதல் வேண்டி
 
          (உதயணன் கூற்று)
     121 - 126 : உயிர்................வேண்டி..
 
(பொழிப்புரை) திருமகள் வதியும் மார்பினையுடைய உதயண
  குமரன் தான் தன்னுடைய உயிரோடு ஒன்றுபட்டுத் தன் உள்ளத்தே
  கலந்துள்ள பதுமாபதியின் குற்றம் இல்லையான சிவந்த
  கடைக்கண்ணின் நோக்கம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.
  அப்பதுமாபதிக்கும் என்னுடைய நோக்கம் வருத்தம் தருவ தாயிற்று;
  என்று நான் நன்கு அறிந்துள்ளேன் என்று கூறா நிற்பவும்,
  அம்மொழியினைத் தெளிந்து கொள்ளமாட்டாத தன் உயிர்க்குயிராகிய
  அந் நண்பர்களைத் தெளிவிக்க விரும்பி; என்க,
 
(விளக்கம்) "உயிர் கலந்தொன்றிய தொன்றுபடு நட்பு''- (அகநா,-205 ; 1.)
  செயிர் - குற்றம். நீர்த்து - தன்மையுடையது. எய்த்தனன் - அறிந்தேன்.
  திரு - திருமகள். மார்பன் ; உதயணன். வேண்டி-விரும்பி.