பக்கம் எண் :

பக்கம் எண்:139

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
           மன்னவன் கூற மற்றது நன்றென
           இன்னுயிர்த் தோழ ரியைந்தனர் போகித்
           தண்ணரும் பினமலர் தகைபெரி துடைய
           ஒண்ணிறத் தளிரோ டுழ்பட விரீஇக்
     5     கண்விழவு தரூஉங் கண்ணி கட்டி
 
             (தோழர் கண்ணி கட்டிவைத்தல்)
                 1-5 ; மன்னவன்,..,,.,.,கட்டி
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணன் கூறலும் இனிய உயிர்த் தோழராகிய
  உருமண்ணுவா முதலிய அமைச்சர்கள் இச்சூழ்ச்சி மிகவும் நன்றே
  யாகும் என்று அவ்வாறு செய்வதற்கு உடன்பட்டுச் சென்று குளிர்ந்த
  அரும்புகளையும் பல்வேறு வகைப்பட்ட மலர்களையும் அழகுமிக்க
  ஒளியும் நிறமும் உடைய தளிர்களோடே முறைமை உண்டாக
  வைத்துக் காண்போர் கண்களுக்குத் திருவிழாப் போன்று இன்பம்
  தரும் மாலைகளாகக் கட்டி; என்க.
 
(விளக்கம்) மன்னவன் - உதயணன். அது - நீ கூறிய சூழ்ச்சி.
  போகி - சென்று. தகை -அழகு. ஊழ் - முறைமை. இரீஇ - வைத்து.
  விழவு - திருவிழா.