உரை |
|
3. மகத காண்டம் |
|
9. கண்ணி தடுமாறியது |
|
அன்ன
மென்னடை யரிவை காணப்
புன்னையு ஞாழலு மகிழும்
பொருந்திய
துன்னரும் பொதும்பிற் றொத்திடைத்
துளங்கத் தளிர்தரு
கண்ணி தம்மு ளறிய 10 ஒளிபெற வைத்தவ
ணொளித்த பின்னர்
|
|
(இதுவுமது)
6 - 10 ; அன்னம்.........பின்னர்
|
|
(பொழிப்புரை) அன்னம்
போலும் மெல்லிய நடையையுடைய அப்பதுமாபதி பார்க்கும் செவ்வி தெரிந்து
புன்னையும் ஞாழன் மரமும் மகிழ மரமும் பொருந்தியுள்ள பிறர் கிட்டுதற்கரிய
ஒரு மரச்செறிவில் பூங்கொத்துக்கள் நன்கு விளங்கும்படி தாங்கள்
தளிர் விரவிப் புனைந்த மாலைகளைத் தம்முள் ஒருவர்க்கு ஒருவர்
தெரியும்படி விளக்கமுண்டாகத் தனித் தனியே வைத்துப்போன பின்னர்;
என்க.
|
|
(விளக்கம்) அரிவை-பதுமாபதி. ஞாழல், மகிழ் என்பன மரங்கள். பொதும்பு - மரச்செறிவு.
தொத்து - பூங்கொத்து, அவண் - அவ்விடத்து.
|