உரை |
|
3. மகத காண்டம் |
|
9. கண்ணி தடுமாறியது |
|
ஆடுகொம்
பன்ன வம்மென்
மருங்குற் பாடகச்
சீறடிப் பல்வளை மகளிரைப்
பக்க நீக்கிப் பைந்தொடிக்
கோமாள் நற்பூம்
பொய்கை புக்குவிளை யாடும் 35 உள்ள
மூர்தர வொழிநிலத் தோங்கிக்
|
|
( பதுமாபதியின்
செயல்) 31 - 35; ஆடு.........ஊர்தர
|
|
(பொழிப்புரை) பதுமாபதி
அசையாநின்ற பூங்கொம்பு போன்ற அழகிய மெல்லிய இடையினையும் பாடகம்
அணிந்த சிறிய அடிகளையும் பலவாகிய வளையல்களையுமுடைய
தோழிமார் களைத் தன் பக்கத்தினின்றும் போக்கி, நல்ல
மலர்களை யுடைய பொய்கையின்கண் இறங்கி விளையாடுதலின்கண் தன்
நெஞ்சம் தன்னை ஊக்குதலால்; என்க.
|
|
(விளக்கம்) ஆடு கொம்பு:
வினைத்தொகை. அம்-அழகு, மருங்குல்-இடை. பாடகம் - ஒரு வகைக் காலணி.
மகளிர் - தோழிமார், கோமாள்- கோமான் என்பதன் பெண்பால்; கோமகள்
என்பதன் மரூஉவுமாம். உள்ளம்-நெஞ்சம். ஊர்தர - ஊக்க,
`
|