பக்கம் எண் :

பக்கம் எண்:146

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
           தாட்கொ ளெல்லையுள் வாட்கண் சிவப்பக்
           குளித்துங் குடைந்துந் திளைத்து விளையாடிக்
     60    கூட்டமை நறும்புகை யூட்டமைத் தியற்றிக்
           கண்ணெழிற் கலிங்கந் திண்ணென வசைத்துப்
           பார மாகி நீரசைந் தொசிந்த
           காரிருங் கூந்த னீரறப் புலர்த்தி
           ஏற்ப முடித்துப் பூப்பிறி தணியாள்
 
                   (இதுவுமது)
              58-64 : வாள்.........முடித்து
 
(பொழிப்புரை) தனது வாள் போலும் கண்கள் சிவக்கும்படி
  குளித்தும் குடைந்தும் நீரில் திளைத்து விளையாடி மணக்
  கூட்டமைந்த நறிய அகிற்புகையை யூட்டிக் கைசெய்து
  கண்ணுக்கு அழகியதாகிய ஈரணி ஆடையைத் திண்ணெனக்
  கட்டி இடைக்குச் சுமையாக நீர்த்துளியோடு அசைந்து
  வளைந்த மழைக்கால் போலும் கருநிறமுடைய தனது கூந்தலை
  நீர் அற்றுப் போகும்படி உலர்த்தி அந்தச் செவ்விக்கு ஏற்ப
  முடியிட்டு; என்க.
 
(விளக்கம்) குடைதல் -நீரைக் கையால் துழாவுதல்.
  திளைத்தல் - இடைவிடாது பயிலுதல். கூட்டமை நறும்புகை -
  நேர்கட்டி முதலியன சேர்தலமைந்த மணப்புகை. கலிங்கம் -
  ஒருவகை .உடை. திண்ணென - இறுக அசைத்து -  கட்டி
  பாரம் - சுமை. ஏற்ப - அச்செவ்விக்குத் தக,