உரை |
|
3. மகத காண்டம் |
|
9. கண்ணி தடுமாறியது |
|
கொள்ளி
னன்றென வள்ளிதழ்க் கோதை 75
மன்னவன் வைத்த சின்மென் போதுடன்
நறுமலர் கமழ்சினை செறியச்
சேர்த்தி
நெடுந்தோட் செல்ல றீரச் சிறந்தவன்
குறுந்தா ரகவயிற் கூடுபு
முயங்கிக்
குவிமுலைச் சாந்த நவிர்முதற் பொறித்தே 80
இழுமென் காவின தியல்புஞ் செல்வமும்
கொழுமலர்த் தடங்கணிற் குலாஅய்
நோக்க
நண்ணியோர் முன்னர்க் கண்ணியது
மறைத்து வண்ண
முகிழு மலருந் தளிரும்
நண்ணி யீன்ற நமக்கெனக்
கரையா 85 அரும்பெறற் றோழியு
மகன்ற செவ்வியுள்
|
|
(இதுவுமது) 74 - 85 ; வள்ளிதழ்................செவ்வியுள
|
|
(பொழிப்புரை) பதுமாபதி
தான் புனைந்த மாலைகளை உதயணகுமரன் வைத்துச்சென்ற சிலவாகிய மெல்லிய
மலர்களுடன் நறிய மலர் மணம் கமழ்கின்ற அந்த ஞாழன் மரத்தினது கிளையின்
கண் செறியும்படி வைத்து, அவ்விடத்தே தன் மெய்க்காதலுக்குச் சிறந்தவனான
அவ்வுதயண குமரனுடைய குறுகிய வடிவமுடைய மலர் மாலையினைத் தன் நெடிய
தோள்களில் துன்பம் தீரும் பொருட்டுத் தன் மார்போடு அணைத்துத்
தழுவித் தன் மாலையின்கண் குவிந்த தனது முலைக்கண் பூசப்பட்ட
சந்தனத்தைத் தடவித் தனது கூந்தலை இலச்சினையாகப் பதித்து வைத்த பின்,
ஆங்கு ஒருசார் நின்ற யாப்பியாயினி இழுமென்னும் ஓசையுடனே வண்டுகள்
இசைபாடுகின்ற அப்பூம் பொழிலினது அழகையும் வளத்தையும் கொழுவிய தாமரை
மலர் போலும் அகன்ற தன் கண்ணாலே சுற்றி நோக்குவாள் போன்று தன்
தோழிமாரிடத்தும் தன் கருத்தினை மறைத்த வளாய் இப்பொழில்கள் பல்வேறு
வண்ணமுடைய அரும்புகளையும் தளிர்களையும் நம் பொருட்டுப் புதுவதாக ஈன்றன
என்று அவற்றைக் கொய்வாள் போன்று பெறற்கரிய அத்தோழி தானும்
அவ்விடத்தினின்றும் பிரிந்துபோன பொழுது;
என்க.
|
|
(விளக்கம்) வள்ளிதழ்க்
கோதை-பெரிய இதழ்களையுடைய மலராற் றொடுக்கப்பட்ட மாலை, மன்னவன் ;
உதயணன். சினை கிளை. செல்லல்-துன்பம். சிறந்தவன் - தன்
காதலுச்குச் சிறந்தவனான உதயணன். நவிர்-கூந்தல். குலாஅய் - சுற்றி,
நண்ணியோர் - தோழிமார்; எதிரே வந்தவருமாம். கரையா - சொல்லி.
தோழி ; யாப்பியாயினி.
|