உரை |
|
3. மகத காண்டம் |
|
9. கண்ணி தடுமாறியது |
|
விரும்புவன
ளாகி விண்ணவர் மருள
வத்தவர் கோமான் வித்தகம் புனைந்த
இலைவினைக் கம்மத்துப் பலவினை
கண்டே தன்முத
லாகவிற் சின்னகை முறுவலொடு 90
பொற்பூண் முலைமிசை யப்புபு தடாஅக்
கண்ணி கொண்டுதன் சென்னி
சேர்த்தி
ஒருங்குகலந் தனள்போற் றிருந்தொளி திகழ்ந்து
பசப்புமீ தடர்ந்து மிகப்பொலிந்
திலங்கத்
|
|
(இதுவுமது) 86
- 93 ; விரும்புவனள்................இலங்க
|
|
(பொழிப்புரை) தமியளாகிய
அப்பதுமாபதி பேரார்வமுடையவளாய்த் தேவரும் வியக்கும்படி வத்தவர்
மன்னனாகிய உதயண குமரன் தன் கலைத்திறம் தோன்ற வாழைக் குருத்தின்கண்
தன் நகத்தாலே பொறித்த ஓவியத் தொழிலின் பலவாகிய திறங்களைக் கண்டு
கண்டு அவ்வோவியத்திற்குத் தானே காரணமாதலை நினைந்து நினைந்து
புன்னகை புரிந்து அக்குருத்தினைப் பொன் அணிகலன் அணிந்த தன்
முலைமேல் அப்பிக்கொண்டும் உதயணனுடைய மலர் வளையங் களை எடுத்துத் தன்
தலையிலே சூட்டிக் கொண்டும் பெரிதும் மகிழ்தலாலே அவ் வுதயணனோடு. கூடினவள்
போன்று புத்தொளி பெற்றுப் பண்டிருந்த பசப்பினையும் வென்று மிகமிகப்
பொலிவுற்று விளங்கா நிற்ப; என்க.
|
|
(விளக்கம்) விரும்புவனள்;முற்றெச்சம். வத்தவர் கோமான்; உதயணன் வித்தகம்-
கலைத்திறம். இலை - வாழைக் குருத்து. கம்மம் - ஈண்டு ஓவியம். முதல் -
காரணம். அப்புபு - அப்பிக் கொண்டு. தடா அக்கண்ணி - மலர் வளையம்.
அடர்ந்து - வென்று.
|