பக்கம் எண்:15
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 1. யாத்திரை போகியது | | இரும்பனை
யிளமடல் விரிந்துளர் வெண்டோட்
டீர்க்கிடை யாத்த நூற்புரிப்
பந்தச்
செந்தோட் டணிமலர் சேர்ந்த வுச்சி
110 அந்தோட் டம்பணை யரக்குவினை
யுறீஇய சித்திரத்
திண்கால் வித்தகக் குடையினர் | |
(இதுவுமது) 107 -
111 ; இரும்பனை,,,,,,,,,,,,குடையினர் | | (பொழிப்புரை) கரிய பனையினது இளமையுடைய குருத்து விரிந்து அசையா நின்ற வெள்ளிய
ஓலையின் இடையே ஈர்க்கு வைத்து நூற்புரியாலே கட்டப்பட்ட கட்டினையும்,
செவ்வண்ணந் தோய்த்த ஓலையாலே இயற்றிய அழகிய தாமரை
மொட்டமைக்கப்பட்ட உச்சியினையும், அழகிய ஓலையிலே கொம்பரக்கு வழித்த
வினைத்திறத்தையும் சித்திரச் செயலையும் திண்ணிய காலையும் உடைய அழகிய
குடையினையுடையோரும். | | (விளக்கம்) இரும்பனை-கரிய
பனை, இளமடல் -குருத்து. உளர் - அசைகின்ற. ஈர்க்கு, வைத்து நூற்
புரியாலே கட்டிய கட்டென்க. செந்தோடு-செந்நிற மூட்டிய ஓலை. மலர்-ஈண்டு
மொட்டு. மலர் எனினுமாம். கால்-ஈண்டுக் குடைக்
காம்பு. |
|
|