பக்கம் எண்:151
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 9. கண்ணி தடுமாறியது | | தன்னகர்
புக்க பின்னர்த் தோழரொடு 105 மன்ன
குமரனும் வந்தவட்
குறுகத் தண்பூங்
கண்ணி கொண்டதன்
றாண்முதல் ஒண்பூஞ்
சாந்தி னுண்பொறி யொற்றிப்
போயினள் புரவலன் பூந்தார்
மார்பிற் காகிய
பால ளிவளென் றறிந்தே 110 கூறிய
கிளவிக் கொத்த தின்றென
உறுபுகழ் நண்பி னுருமண்
ணுவாவவர்க் கறியக்
கூற வங்கை மலர்த்தா
வியந்த மனத்த ராகி
நிகழ்ந்ததற்
கியாப்புறு கரும மாராய்ந் திருந்துழி
| | (உருமண்ணுவா
மற்றைத் தோழர்க்குக்
கூறல்) 104- 114 : தன்னகர்,,,,,,,,,,..இருந்துழி
| | (பொழிப்புரை) தனது
மண்டபத்தை அடைந்த பின்னர் உதயண குமரனும் தன் தோழர்களோடு மீண்டு வந்து
தான் மாலை வைத்துச் சென்ற இடத்தை எய்த உருமண்ணுவா அந்த
உதயணன் வைத்த மாலையை அப்பதுமாபதி கைக்கொண்டு அந்த ஞாழன் மரத்தினடிப்
பகுதியில் தான் வந்தமைக்கு அடையாளமாக ஒளியுடைய அழகிய சந்தனத்தைத்
தடவித் தன் கூந்தலாலே நுண்ணிதின் இலச்சினை பொறித்துப் போயினள்
கண்டீர்! நம் மன்னவன் வெற்றி மாலை யணிந்த மார்பிற்
பொருந்துதற்குரிய ஊழினை உடையாள் இவள் என்று உணர்ந்து நமக்குக் கூறிய
மொழிகளுக்கு இச்செயல் மிகவும் பொருந்திற்று என்று ஏனையோரை நோக்கி
அவர் உணரும்படி கூறா நிற்ப, அது கேட்ட தோழர்கள் வியப்பினாலே தம்
அழகிய கைகளை விரித்துப் பெரிதும் மருண்ட மனத்தை உடையராய் இங்ஙனம்
நிகழ்ந்துள்ள இச்செயலுக்குப் பொருத்தமான இனிச் செய்ய
வேண்டிய காரியங்களைத் தம்முள் ஆராய்ந்து கொண்டிருக்கும் என்க
| | (விளக்கம்) நகர் -
பதுமாபதி வந்து இறங்கிய மண்டபம். தோழர் - உரு மண்ணுவா முதலியோர்.
மன்னகுமரன் ; உதயணன். பொறி - இலச்சினை ; முத்திரை. புரவலன் ;
உதயணன். பாலள் - ஊழினை . உடையவள் . உறுபுகழ் - மிக்க புகழ். அவர்க்கு
- ஏனைய தோழர்களுக்கு. மலர்த்தா - மலர்த்தி; விரித்து. யாப்புறு
கருமம் - பொருத்தமான செயல்.
|
|
|