உரை |
|
3. மகத காண்டம் |
|
9. கண்ணி தடுமாறியது |
|
அரும்பெறற்
சூழ்ச்சி யவனையும் பின்னிணைப் 125
பெருந்திற லவரையும் பெற்றோன்
போல அன்புபுரி
பாவை யாடிய
பொய்கையுள் நம்புபுரி
மன்னனு நயந்தன
னாடி உடையு
மடிசிலு முருமண் ணுவாவிற்குக்
கடனா வைத்தலிற் கைபுனைந்
தியற்றி 130
அகன்மடி யவன்றா னமர்ந்து கொடுப்ப
|
|
(உதயணன் அவற்றை அணிந்து
கொள்ளுதல்) 124
- 130 ; அரும்பெறல்............கொடுப்ப
|
|
(பொழிப்புரை) அந்த
நன்கொடைப் பொருள்களை ஏற்றுக் கொண்ட உதயணகுமரன் பெறற்கரிய
ஆராய்ச்சித் திறன் உடைய யூகியையும் தன் பின்பிறந்தோராகிய
பேராற்ற லுடைய பிங்கல கடகர்களையும் எய்தினவன் போன்று
பெரிதும் மகிழ்ந்து தன்பால் காதல் புரிகின்ற பாவைபோல் வாளாகிய
அப்பதுமாபதி நங்கை நீராடிய அந்தப் பொய்கை யின்கண் அவளைப் பெரிதும்
காதலிக்கின்ற தானும் நீராடுதலைப் பெரிதும் விரும்பி ஆடித் தனக்கு உடை
வழங்குதலும் அடிசில் ஊட்டுதலும் உருமண்ணுவாவென்னும் அமைச்சனின்
கடனாக வைத்திருத்தலாலே, அவ்வமைச்சன் உடை முதலிய வற்றைக் கைசெய்து
விரும்பிக் கொடுப்ப; வென்க.
|
|
(விளக்கம்) அரும்பெறற்
சூழ்ச்சியவன் என்றது, யூகியை, பின் இணைப் பெருந்திறல் அவர் என்றது
தம்பியராகிய பிங்கல கடகர்களை. பாவை ; பதுமாபதி. நம்புபுரி
-விரும்புதலைச் செய்யும். உடை உணவு முதலியவற்றை அவ்வப்போது கொடுக்கும்
தொழிலை அரசர்கள் தம்பால் பேரன்புடைய உயிர்த்தோழர்களிடம்
ஒப்புவித்தல் இயல்பு. அகன் மடி-அகன்ற ஆடை. அவன் ;
உருமண்ணுவா. அமர்ந்து - விரும்பி,
|