உரை |
|
3. மகத காண்டம் |
|
9. கண்ணி தடுமாறியது |
|
றனக்கவ ளுரிமை
பூண்டமை தமர்களைச்
சினப்போர் மதலை செவ்வன் றேற்றிப்
பள்ளி கொண்ட நள்ளிருள்
யாமத்துப் போரடு
தறுகண் பொருந்தலும் பொருக்கென
|
|
(உதயணன்
செயல்) 146 - 149 ;
தனக்கு............பொருந்தலும
|
|
(பொழிப்புரை) வெகுளி
மிக்க பேராற்றலையுடைய உதயண குமரன் தனக்கு அப்பதுமாபதி நங்கை கற்புக்
கடம் பூண்ட செய்தியை மேலே கூறப்பட்ட நிகழ்ச்சியால் தன்
தோழர்களை நன்கு தெளிவித்து அற்றை நாளிரவு பாயலின் கண் கிடந்து
நள்ளியாமங்காறும் பதுமாபதியை நினைந்து நினைந்து துயில் பெறாமல் பின்னர்
அரிதாகத் தன்னுடைய போரின்கண் பகை வரை அச்சுறுத்தும் தறுகண்மையுடைய
விழிகளை மூடித் துயிலு மளவிலே என்க.
|
|
(விளக்கம்) அவள் ;
பதுமாபதி. உரிமை- கற்புரிமை. தமர் - உருமண்ணுவா முதலியோர். மதலை ;
உதயணன். நள்ளிருள் யாமம் வருமளவும் பதுமாபதியை நினைந்து துயிலாதிருந்து
பின்னர் அரிதில் துயின்றான் என்பார் 'யாமத்துக்கண்
பொருந்தலும்' என்றார். போரின்கண் பகைவரை அடுதற்குக் காரணமான கண்
என்க.
|