உரை |
|
3. மகத காண்டம் |
|
9. கண்ணி தடுமாறியது |
|
கனவிற்
றோன்றக் காளையும் விரும்பி
மாசில் கற்பின் வாசவ
தத்தாய் வன்க
ணாளனேன் புன்கண் டீர 160 வந்தனை
யோவென வாய்திறந் தரற்றப |
|
(இதுவுமது)
157 - 160 : காளையும்............அரற்ற |
|
(பொழிப்புரை) அதுகண்ட
உதயண குமரனும் அக்கனவிலேயே அவளைப் பெரிதும் விரும்பிக் குற்றமற்ற
கற்பினையுடைய வாசவதத்தாய்! கண்ணோட்டமற்ற என்னுடைய துன்பம்
தீர்தற் பொருட்டு என்பால் அருள்கொண்டு நீயே வலிய வந்தனையோ?
என்று தனது வாய் திறந்து புலம்பா நிற்ப; என்க, |
|
(விளக்கம்) காளை ;
உதயணன். மாசு - குற்றம். வன்கண் - கண்ணோட்ட மில்லாதவன். புன்கண் -
துன்பம். அரற்ற - புலம்ப |