உரை |
|
3. மகத காண்டம் |
|
9. கண்ணி தடுமாறியது |
|
பைந்தளிர்க்
கோதை பையென மிழற்றி
ஏதில னன்னாட் டெற்றுறந்
திறந்தனை காதலர்
போலுங் கட்டுரை யொழிகெனக்
|
|
(இதுவுமது)
161 - 163 ; பைந்தளிர்.........என
|
|
(பொழிப்புரை) அது கேட்ட
வாசவதத்தை மெல்ல வாய் திறந்து குழறி ''ஏடா.!நீ என்னைப் பிரிந்து
அயலானுடைய நல்ல நாட்டிற்குச் சென்றனை அல்லையோ? அங்ஙனமிருந்தும்
பெருங்காதலுடையார் போலப் பேசும் இப்பொய்ம் மொழியை ஒழிவாயாக'' என்று
கூறவென்க.
|
|
(விளக்கம்) கோதை :
வாசவதத்தை. ஏதிலன் - அயலான். இறந்தனை -
சென்றனை.
|