பக்கம் எண்:160
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 9. கண்ணி தடுமாறியது | | குறுகா ளகறொறு
மறுகுபு மயங்கி 165 நிற்பெயர்ப் பாள
னிப்பதி யுளனெனக்
கற்பயில் பழுவங் கடந்தியான் வந்தனென்
வெகுள னீயெனத் தவளையங்
கிண்கிணிச் சேவடி
சேர்ந்து செறியப் பற்றி
வென்றடு குருசில் வீழ்ந்தன னிரப்ப | | (இதுவுமது)
164 -169 : குறுகாள்,,,,,.,,,இரப்ப | | (பொழிப்புரை) பெரிதும்
ஊடல் கொண்டவளாய் தன்பானின்றும் அகன்று அகன்று போந்தோறும் மனம்
சுழன்று மயங்கி 'அன்பே! உன்னை மீட்டுத் தரும் பெரியோன் ஒருவன்
இந்நகரத்தே வருகின்றான் எனக் கேள்வியுற்று நின்னை மட்டும் பொருட்டே
மலைகள் மிகுந்த காட்டைக் கடந்து யான் இந்நகரத்துக்கு வந்தேன்.
இதன் பொருட்டு நீ என்னைச் சினவாதே கொள்' என்று இரந்து
தவளைக் கிண்கிணி அணிந்த அவ்வாசவதத்தையின் அடிகளில் வீழ்ந்து வணங்கி
அவற்றைப் பற்றிக் கொண்டு பகைவரை வென்று கொல்லும் வீரமுடைய அவ்வுதயண
மன்னன் பின்னரும் இரப்புரை கூறி வேண்டா நிற்ப என்க | | (விளக்கம்) மறுகுபு -
சுழன்று. பெயர்ப்பாளன் - மீட்டுத் தருபவன். பதி - இராசகிரியம்.
தவளைக்கிண்கிணி - தவளை வாய் போன்ற வாயையுடைய கிண்கிணி. குருசில் ;
உதயணன். |
|
|