பக்கம் எண் :

பக்கம் எண்:161

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
         
      170    மதுநாறு தெரியன் மகதவன் றங்கை
            பதுமா பதிவயிற் பசைந்தவள் வைத்த
            கோதையுஞ் சாந்துங் கொண்டணிந் தனையென
            மாதர்த் தேவி மறுத்து நீங்கத்
 
                  (இதுவுமது)
              170 - 173 ; மது............நீங்க
 
(பொழிப்புரை) அதுகேட்ட அக்கனவு வாசவதத்தை 'ஏடா!
  பொய் கூறாதே கொள். நீ தேன் மணக்கும் மலர்மாலை
  யணிந்தவளும் தருசகன் தங்கையும் ஆகிய பதுமாபதி
  என்பவளிடத்து அன்பு வைத்து அவள் நினக்கென வைத்துச்
  சென்ற மாலையையும் சாந்தையும் ஏற்றுக்கொண்டு அணிந்து
  கொண்டாய் அல்லையோ'' என்று சினந்து கூறிக் காதல்
  மிக்க அக்கோப் பெருந்தேவி அவன் வேண்டுகோளை
  மறுத்துப் பின்னரும் நீங்கிச் செல்லாநிற்ப; என்க.
 
(விளக்கம்) மது - தேன். தெரியல் - மாலை. மகதவன் ;
  தருசகன். பசைந்து - அன்பு வைத்து. அவள் ; பதுமாபதி.
  மாதர் காதல்.