பக்கம் எண் :

பக்கம் எண்:162

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
            தண்மலர்ப் படலைத் தருசகன் றங்கை
     175     பன்மலர்க் கோதைப் பதுமா பதியெனும்
            பேருடை மாத ருளண்மற் றென்பது
            நேரிழை யரிவை நின்வாய்க் கேட்டனென்
            இன்னவும் பிறவுங் கூறி மற்றென்
            நன்னர் நெஞ்ச நாடுவை நீயெனப்
     180     பின்னரு மிக்குப் பெருமக னிரப்ப
            மடங்கெழு மாதர் மறைந்தன ணீங்கக்
            கடுங்கதிர்க் கனலி கால்சீ்த் தெழுதர
            விடிந்தது மாதோ வியலிருள் விரைந்தென்.
 
                    (இதுவுமது)
          174 - 183 ; தண்மலர்.........விரைந்தென்
 
(பொழிப்புரை) அது கண்ட உதயணன் மீண்டும் அவளை
  அணுகி, ''நேரிய அணிகலன் அணிந்த அரிவாய்! குளிர்ந்த
  மலர் மாலை யணிந்த தருசகனுடைய தங்கையாகிய பலவாகிய
  மலராற் புனைந்த மாலையையுடைய பதுமாபதி என்னும்
  பெயருடைய மாதர் ஒருத்தி இருக்கின்றாள் என்பது இப்பொழுது
  நீ கூறத்தான் நான் கேள்வியுற்றேன். நீ என்னுடைய நல்ல
  நெஞ்சத்தை ஐயுற்று ஆராய்கின்றாய் போலும்'' என்று இவை
  போல்வனவாகிய நயமொழி பலவும் பேசி மீண்டும் மீண்டும்
  அப் பெருமகன் இரவா நிற்கும் பொழுதே, மடப்பம் பொருந்திய
  அக்கனவு வாசவதத்தை நல்லாள் மறைந்து ஒழியக் கொடிய
  கதிரையுடைய ஞாயிற்று மண்டிலம் இருளை அகற்றி எழுதலாலே
  அப்பேரிரவு விரைந்து விடிந்தது என்க
 
(விளக்கம்) படலை - தளிர் விரவிய மலர். மாலைபேர் -
  பெயர். அரிவை ; விளி. நன்னர் - நன்மை உடைய. பெருமகன் ;
  உதயணன். கனலி - ஞாயிறு. கால் சீத்து - இருளை ஒழித்து.
  வியல் - அகன்ற.

             9. கண்ணி தடுமாறியது முற்றிற்று.
   -----------------------------------------------------------------------