பக்கம் எண் :

பக்கம் எண்:163

உரை
 
3. மகத காண்டம்
 
10. புணர்வு வலித்த
 
         
           விடிந்திரு ணீங்கலும் வடிந்த மான்றேர்
           உதயண குமரன் புதையிருட் கண்ட
           கனவின் விழுப்ப மனமொன் றாகிய
           தோழர்க் குரைப்ப வாழ்கென வாழ்த்தி
 
         (உதயணன் செயல்)
      1-4 ; விடிந்து.........வாழ்த்தி
 
(பொழிப்புரை) இவ்வாறாக இருள் நீங்கிப் பொழுது விடிந்த
  அளவிலே பயிற்றப்பட்ட குதிரைகளையுடைய தேரை யுடைய
  உதயண குமரன்தான் முதல் நாள் இரவின்கண் துயிலுங்கால்
  கண்ட கனவினது சிறப்பைத் தன்னோடு நெஞ்சொன்றிய 
  உருமண்ணுவா முதலிய  தோழர்க்குக் கூறா நிற்ப,
  அதுகேட்ட- அத்தோழர்களும் ''எம்பெருமான் நீடூழி வாழ்க'!?
  என்று வாழ்த்தி என்க.
 
(விளக்கம்) வடிந்த மான் -பழக்கிய குதிரை. புதை
  இருள்- உலகை மூடிய இருள். விழுப்பம் - சிறப்பு.
  கனவு கண்டோர் அதனைக் கூறக் கேட்புழிக் கேட்டவர்
  அவரை வாழ்த்துதல் மரபு,