பக்கம் எண் :

பக்கம் எண்:164

உரை
 
3. மகத காண்டம்
 
10. புணர்வு வலித்த
 
         
     5     முற்றிழை யரிவை செற்றங் கொண்டனள்
           மற்றிவள் வைத்த மாலையுஞ் சாந்தமும்
           அணிந்ததை பொல்லா தருளினை யினியிவட்
           கனிந்த காமங் கைவிடல் பொருளென
           உயிர்த்துணைத் தோழ ருரைப்பவும் விடாஅன்
 
          (தோழர் கூறுதல்)
       5-9; முற்றிழை.........விடாஅன்
 
(பொழிப்புரை) ''எம்பெருமானே .! நிரம்பிய அணிகள் அணிந்த
  எம் பெருமாட்டியா ராகிய வாசவதத்தையார் நின்பால் பெரிதுஞ்
  சினங்கொண்டார் ஆதல் வேண்டும். நீதானும் இப்பதுமாபதி யார்
  வைத்த மாலையையும் சந்தனத்தையும் அணிந்து கொண்டசெயல்
  மிகவும் பொல்லாங்குடைய செயல் அன்றோ? ஆகவே,  இனி நீ
  வாசவதத்தைக்கு அருள் உடையையாய் இப்பதுமாபதியின்பால் நீ
  நின்நெஞ்சங் கனிந்த காமத்தைக் கைவிடுதலே நற்செயலாகும்''
  என்று அந்த உயிர்த்துணைத் தோழர்கள் அறிவுறுத்து வேண்டா
  நிற்பவும் அக்கொள்கையை விடாதவனாய்  என்க.
 
(விளக்கம்) முற்றிழை - தொழில் நிரம்பிய அணிகலன்.
  அரிவை;  வாசவதத்தை. செற்றம் - சினம். இவள்;பதுமாபதி.
  அணிந்ததை-ஐகாரம் அசை. இவள் ; பதுமாபதி.
  பொருள் - நற்செயல்.