பக்கம் எண் :

பக்கம் எண்:165

உரை
 
3. மகத காண்டம்
 
10. புணர்வு வலித்த
 
         
     10     செயிர்த்தொழி லியானைச் செம்ம றெளியான்
           ஏற்ற பொழுதே யின்பத் தேவியோடு
           வேற்றோன் போல விழைவினை யகற்றித்
           தற்கா முற்ற தன்னமர் காதற்
           பொற்பூண் மாதரைப் பொருந்த வலிப்ப
 
          (உதயணன் செயல்)
       10-14 : செயிர் ,,,,,,,,, வலிப்ப
 
(பொழிப்புரை) போர்த்தொழில் மிக்க யானைப்படைகளுக்குத் 
  தலைவனாகிய உதயண மன்னன் அத்தோழர் அறிவுரையை ஏற்றுக்
  கொள்ளானாய் முதல் நாள் இரவு கனவு கலைந்து விழிப்புற்ற
  பொழுதே கனவிற் கண்ட இன்ப மிக்க கோப்பெருந்தேவியாகிய
  வாசவதத்தைக்கு அயலானைப் போல அவள்பால் எழுந்த
  விருப்பத்தினையும் துவர நீக்கித் தன்னைப் பெரிதும்  காதலித்தவளும்
  தன்னால் பெரிதும் காதலிக்கப்பட்டவளும் ஆகிய பொன்னணிகலன்
  அணிந்த அப்பதுமாபதியையே அடைதற்குப் பெரிதும் துணியா
  நிற்ப; என்க.
 
(விளக்கம்) செயிர்த்தொழில்-சினந்து செய்யும்
  போர்த்தொழில்-  செம்மல் ; தலைவன். ஏற்ற பொழுது-துயிலெழுந்த
  பொழுது. இன்பத்தேவி ; வாசவதத்தை. வேற்றோன் - அயலான்.
  மாதர் ; பதுமாபதி,