பக்கம் எண் :

பக்கம் எண்:166

உரை
 
3. மகத காண்டம்
 
10. புணர்வு வலித்த
 
         
     15     வாமான் றானை வத்தவ னிவனெனக்
           கோமாற் குணர்த்திக் கூட்டிய வந்தேம்
           ஒருவயி னோக்கி யிருவரு மியைதலின்
           ஏயர் பெருங்குடிக் காகுபெய ருண்டென
           ஊழ்வினை வலிப்போ டுவந்தன ராகிச்
 
        (உருமண்ணுவா முதலியோர் உடன் படல்)
           15-19 : வாமான்.........ஆகி
 
(பொழிப்புரை) தாவுகின்ற குதிரைப் படைகளையுடைய
  வத்தவநாட்டு அரசன் இவன் என்று இந் நாட்டு மன்னனாகிய
  தருசகனுக்கு அறிவித்து இருவரையும் நட்பாக்கி வைத்தற்கு
  இந்நாட்டிற்கு நம்பெருமானை அழைத்து வந்தேம். நமக்கு
  ஊழ்வினையும்  துணை செய்வதாயிற்று. இந்நாட்டு மன்னன்
  தங்கை பதுமாபதியும் நம்பெருமானும் ஓரிடத்தே கூடி ஒருவரை
  ஒருவர் நோக்கி  உள்ளத்தானும் ஒன்று பட்டனர். ஆதலின்
  நம்பெருமான் தோன்றிய. பழம் பெருங் குடிக்கு இந் நிகழ்ச்சியாலே
  ஆக்கம் உண்டாதல் ஒருதலை என்று உள்ளம் உவந்தாராக; என்க.
 
(விளக்கம்) கோமான் ; தருசகன்- .கூட்டிய ; செய்யிய
  என்னும் வினையெச்சம். இருவரும் - உதயணனும் பதுமாபதியும்.
  ஏயர் குடி-உதயணன் பிறந்த குடி. ஆகி-ஆக.