உரை |
|
3. மகத காண்டம் |
|
10. புணர்வு வலித்த |
|
30 குன்றுபல
வோங்கிய குளிர்நீர்
வரைப்பில்
நன்றுணர் மாந்தர் நாளைக்
காலை இரவல
ருருவொடு புரவலற்
போக்கி
மாற்றோ ருட்கும் வேற்றுநாட்
டகவயிற்
றாமு முன்ன ராகி மற்றவற் 35 கேம
நன்னெறி யீத லாற்றார் |
|
(தோழர் கருதுதலும்
சொல்லுதலும்) 30 -
35; குன்று.........ஆற்றார் |
|
(பொழிப்புரை) அது கேட்ட
அமைச்சர்கள் உதயணனை நோக்கி ''பெருமானே! மலைகள் பலவும் உயர்ந்துள்ள
குளிர்ந்த நீர் நிரம்பிய கடலால் சூழப்பட்ட இப்பேருலகத்தில் வாழும்
நன்மையை உணரும் இயல்புடைய சான்றோர்கள் நாளைக்காலையிலேயே எங்களைப்
பற்றி யாது கூறுவர்? 'அந்தோ இரவலர் வடிவத்தோடே தம் மன்னனைப்
பகைவர் அஞ்சும் வேற்று நாட்டின் கண் தாமும் உடனிருந்தே செலுத்திப்
பின்னர் அம்மன்னனுக்குப் பாதுகாவலாகும் நல்ல வழியைக் காட்ட
வியலாதவர் ஆயினர்?. என்க, |
|
(விளக்கம்) நன்றுணர்
மாந்தர்-சான்றோர், நாளைக் காலை என்றது இச்செயலால் உனக்குத் துன்பம்
உண்டாயின் அப்பொழுதே என்று காலவண்மை குறித்து நின்றது.
இரவலர்-ஏற்போர். புரவலன்-அரசன். மாற்றோர் - பகைவர்.
உட்கும்-அஞ்சும்.- அவற்கு-,அவ்வரசனுக்கு. ஏம நன்னெறி - காப்புடைய நல்ல
வழி. ஈதல்- ஈண்டுக் காட்டுதல் என்க. |