உரை |
|
3. மகத காண்டம் |
|
10. புணர்வு வலித்த |
|
காமங் கன்றிய காவல்
வேந்தனைத்
தம்மிற் றீர்த்து வெம்முரண்
வென்றி
மகதவன் றங்கை மணிப்பூண்
வனமுலை நுகர
விட்டனர் நுண்ணறி விலரெனின் 40
ஏத மதனா னிகழ்பவை
யிவையென
நீதியிற் காட்ட நெடுந்தகை யண்ணல்
|
|
(இதுவுமது) 36-41; காமம்....
..காட்ட
|
|
(பொழிப்புரை) ''கன்றிய
காமமுடைய தம் வேந்தனாகிய உதயணனைத் தம்மிடத்தினின்றும் விலக்கி
வெவ்விய போர்வெற்றியினையுடைய மகத நாட்டு மன்னவனாகிய
தருசகனுடைய தங்கை பதுமாபதியினது மணி அணிகலன் அணிந்த அழகிய முலையினை நுகர
விட்டனர். ?நுண்ணிய அறிவில்லாத எளியர்? என்று கூறின்
அவ்விகழ்ச்சியால் வரும் குற்றங்கள் இன்னின்னவை ஆகு'' மென்று நீதி
நூற்சான்றுடனே எடுத்துக் காட்டா நிற்ப; என்க.
|
|
(விளக்கம்) தம்பாற் குறை
வேண்டிய மன்னனை இவ்வமைச்சர்கள் இடித்துக் கூறும் மாண்புணர்க, சான்றோர்
பழிப்பர் எனவே இதனால் தீங்குறுதல் ஒருதலை என்றாரும்
ஆயிற்று. . காவல் வேந்தன் - தம்மாற் காக்கப்படும் மன்னன். மகதவன் ;
தருசகன். '.ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ்
செய்யற்க சான்றோர் பழிக்கும்
வினை'' (குறள் - 956,)
என்பதுபற்றிச் சான்றோர் பழிக்கும் இவ்வினைக்கு யாங்கள் உடன் படல்
மிகவும் தீதாம் என்பார், 'நன்றுணர் மாந்தர்......நுண்ணறி விலர் எனின்
ஏதம்' என்றார். தங்கை;பதுமாபதி. ஏதம் - துன்பம், நீதி -
நீதிநூல்.
|