உரை |
|
3. மகத காண்டம் |
|
1. யாத்திரை போகியது |
|
புரிநூ
லணிந்த பொன்வரை
மார்பினர்
விரிநூற் கிரந்தம் விளம்பிய
நாவினர் வாச
வெள்ளை வரைந்த கழுத்தினர் 125 தேசந்
திரிதற் காகிய வணியொடு
வளங்கெழு மாமலை வன்புன்
றாளக நலங்கெழு
சிறப்பி னாட்டக நீந்திப் |
|
(இதுவுமது)
122 - 127 ; புரி....................நீந்தி |
|
(பொழிப்புரை) பூணூல்அணிந்த பொன்மலைபோலும் அகன்ற மார்பினையுடையோரும், விரிந்த
நூலின் கண்ணதாகிய கிரந்தங்களை ஓதாநின்ற நாவினையுடையோரும், மணமுடைய
வெண் சந்தனமெழுதிய கழுத்தினையுடையோரும் ஆகியஇவ்வாறு நாட்டி
யாத்திரை செய்தற்கேற்ற ஒப்பனையோடு அவ்வுதயணன் முதலியோர் வளம்
பொருந்திய பெரிய மலையினையுடைய வன்னிலப் பரப்பாகிய 'புன்றாளகம்'
என்னும் நலம்மிக்க சிறப்பமைந்த நாட்டைக் கடந்து என்க. |
|
(விளக்கம்) புரிநூல் -
முப்புரிநூல். பொன் வரை - அழகிய கோடுகளுமாம். கிரந்தம் - சுலோகம் ;
சாத்திரமுமாம். வெள்ளை - வெண்சந்தனம். புன்றாளகம் - ஒரு குறிஞ்சி
நாடு. |