உரை |
|
3. மகத காண்டம் |
|
10. புணர்வு வலித்த |
|
வேண்டா மற்றிது மாண்டகைத்
தன்றென
மற்றவள் புகுதரு மாடம்
புகினே
குற்றம் படுவ கூறக் கேண்மதி 45
காவ லாளர் கடுகுபு
வந்தகத்
தாராய்ந் தெதிர்ப்ப ரருநவை யுறாது |
|
(இதுவுமது) 41-46 :
நெடுந்தகை.........எதிர்ப்பர் |
|
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணன்
'நுங்கள் அறிவுரை எனக்கு வேண்டா. இவ்வறிவுரை ஆண்மைத் தன்மையும்
அழகும் உடையதன்று' என்று மறுத்துக் கூறா நிற்ப, அதுகேட்ட
அமைச்சர்கள், 'வேந்தே! அப்பதுமாபதி வந்து புகாநின்ற மாடத்திலே நீயும்
சென்று புகுவாயாயின் உண்டாகும் குற்றங்களை யாங்கள் சொல்லக் கேட்டருள்க.
பதுமாபதியின் காவலாளர்கள் விரைந்துவந்து அம்மாடத்தினுள் யாண்டும்
ஆராய்ந்து நின்னைக் கண்டு கொள்வர்' என்க, |
|
(விளக்கம்) நெடுந்தகை
அண்ணல் ; உதயணன். ஆண்ட கைத்து-ஆண்மைத் தன்மை யுடையது.
அவள்-அப்பதுமாபதி- புகின்-நீ புகுந்தால். கேண்மதி-மதி: முன்னிலையசை.
கடுகுபு, விரைந்து. |