உரை |
|
3. மகத காண்டம் |
|
10. புணர்வு வலித்த |
|
தாராய்ந் தெதிர்ப்ப ரருநவை
யுறாது
போரார் குருசில் போதர
வுண்டெனின்
உருவ மாதர் பெருநலம்
பெறுதி
நன்றா வெய்தும் வாயி லவருனை 50
என்றே யாயினு மிரவல
னென்னார்
வேண்டா வதுவென விதியிற்
காட்டி
மாண்ட தோழர் மன்னவன்
றன்னை
நிறுத்த வாயிலோடு வலிப்பனர் கூற |
|
(இதுவுமது)
46-53; அருநவை............. கூற |
|
(பொழிப்புரை) ''அங்ஙனம்
காணுமிடத்து நீ உய்தற்கரிய துன்பம் எய்துதல் கூடும். ஒரோ வழி துன்பம்
எய்தாமல்போர் வலிமைபொருந்திய எம்பெருமான் செல்லுதல் கூடுமாயின்
அழகிய அப்பதுமாபதியின் பெண்மையைப் பெருநலத்தை நீ நுகர்தல்
கூடும். நீ செல்லும் பொழுது ஆண்டுவரும் வாயில் காவலர் உன் தோற்றத்தைக்
கண்டு வைத்தும் எந்தக் காலத்தும் இவனும் ஓர் இரவலன் என்று கருதி
வாளாவிரார். ஆதலின் இச்செயல் செய்யவேண்டா '' என்று மாட்சிமையுடைய
அத்தோழர்கள் நீதி நூற்சான்றோடு எடுத்துக்காட்டி அவ்வுதயணனை
மறுத்த காரணங்களோடு வற்புறுத்திக் கூறா நிற்ப; என்க. |
|
(விளக்கம்) அருநவை-உய்தற்கரிய துன்பம்; தண்டனையுமாம். போதரவு-செல்லுதல்.
உருவம்-அழகு. மாதர்-பதுமாபதி. நலம்- பெண்மை நலம். நன்று-பெரிது.
வாயிலர்-வாயில் காவலர் அது - அத்தீச்செயல். விதி-நூல்விதி.
வாயில்-காரணம். வலிப்பனர்- வற்புறுத்தி ; முற்றெச்சம் |