பக்கம் எண் :

பக்கம் எண்:172

உரை
 
3. மகத காண்டம்
 
10. புணர்வு வலித்த
 
         
           மறுக்க லாற்றா நெஞ்சின னாகி
     55    வத்தவர் பெருமக னுத்தர நாடி
           அடுமுர ணீங்கி யறுபது கழிந்தோர்
           கடுவெயில் வந்த காவ லாளர்கண்
           மருள்படு வல்லறை மருங்கணி பெற்ற
           இருள்படு மாதலி னெற்காண் குறுதல்
     60    அரிய தவர்க்கெனத் தெரியக் காட்டி
           வெற்ற வேலான் மற்றுங் கூறினன்
 
         (உதயணன் விடை)
       54 - 61 ; நிறுக்கல்............கூறினன்
 
(பொழிப்புரை) அவ்வறிவுரை கேட்ட பின்னரும் உதயணன்
  தன் நெஞ்சினை அப்பதுமாபதியின்பால் செல்ல ஒண்ணாது
  நிறுத்தும் ஆற்றலற்றவனாய். அப்பெருமகன் அவ்வமைச்சர்க்குக்
  கூறும் விடையை நெடிது. சிந்தித் துணர்ந்து, ''நண்பரீர்! கேண்மின்,
  போர் செய்யும் ஆற்றல் குறைந்து அறுபது வயதினைக் கடந்தவரும்.
  கடிய வெயிலின்கண் வந்தவரும் ஆகிய அக்கிழக்காவலர்களின்
  கண்கள் யான் மறைந்துறையும் வலிய அழகிய அவ்வறையின்கண்
  ஒளி மங்கி இருண்டு போம். ஆதலின்.என்னை அக்காவலர் காணுதல்
  இயலாது'' என்று அவ்வமைச்சர்க்கு விளங்கக் காட்டி வெற்றி
  பொருந்திய வேலையுடைய அவ்வுதயண மன்னன் பின்னரும்
  கூறுவான்; என்க,
 
(விளக்கம்) இதன்கண், உதயணன் அக்காவலர்க்குக்
  கண் தெரியாது என்பதற்குக் காட்டும் காரணம் சதுரப்பாடுடையதாதல்
  உணர்க.. அடுமுரண்-போர் செய்யும் ஆற்றல். அறுபது-அறுபது
  ஆண்டுகள். அணி பெற்ற வல்லறை மருங்கு என மாறுக.
  தெரியக்காட்டி. என்றது ஆசிரியர் உதயணன் சூழ்ச்சியை இகழ்ந்து
  கூறியபடியாம். -வெற்றம்- வெற்றி. இக்காரணம் தன் நெஞ்சிற்கு
  அமைதி தாராமையின் பின்னரும் கூறுவான் என்றவாறு