பக்கம் எண் :

பக்கம் எண்:174

உரை
 
3. மகத காண்டம்
 
12அமாத்தியர் ஒடுங்கியது
 
         
           . . ... ... . . .. . . .. . ... ... . .வணி தோங்கி
          ஆரணங் காகிய வகல்விசும் புகக்கும்
          தோரண வாயி றுன்னின னாகி
          அருமொழி யுணரும் பெருமொழி யாளனைத்
     5    தாக்கருந் தானைத் தருசக குமரன்
          வேட்கும் விச்சை யாதென வினவப்
 
        1-6 : வணிதோங்கி............வினவ
 
(பொழிப்புரை) வணிது(?) உயர்ந்து அரிய தெய்வத்தன்மையுடைய
  விசும்பினளவும் உயர்ந்த தோரணங்களையுடைய பெருவாயிலை உதயணன்
  அடைந்து அறிதற்கரிய மொழியையும் நுண்ணிதின் உணரும் ஆற்றலுடைய
  பெரும் பேச்சாளனாகிய அவ்வாயில் காவலனை நோக்கிப் பகைவரால்
  தாக்குதற்கரிய படைகளையுடைய இத்தருசக வேந்தனுக்குப் பெரிதும் விருப்ப
  மான வித்தை யாது? என்று வினவா நிற்ப; என்க.
 
(விளக்கம்) அணங்கு-தெய்வம். அகல்-விசும்பு-ஏனைப் பூதங்கள்
  தோன்றி விரிதற்குக் காரணமான விசும்புமாம். உதயணன் வாயிலையடைந்து
  என்க. அருமொழி-பொருளுணர்தற்கு அரியமொழி ; அறிதற்கரிய
  பிறநாட்டு மொழியுமாம்.பெருமொழியாளன்-நன்கு பேசுபவன்;என்றது வாயில்
  காவலனை. விச்சை- வித்தை. இவ்விடத்தே ஓரடி இறந்தொழிந்தது,