உரை |
|
3. மகத காண்டம் |
|
3. மகத காண்டம |
|
பயந்தோன் படைத்த படைப்பரும் வெறுக்கை
இருந்துழி யிசையா னிகந்தயர்த்
தொழிந்தனன்
அன்னவை யறிந ருளரெனி னவர்கட்
10 கின்னுயி ராயினு மீவ
னவனென
மன்னவன் மனத்ததை யெல்லா மதித்து
நன்மூ தாளன் பன்னினன் மொழிய |
|
(வாயிலோன்
விடை) 7 - 12 : பயந்தோன்
........மொழிய |
|
(பொழிப்புரை) "ஐய! எங்கள்தருசக மன்னனை ஈன்ற தந்தை ஈட்டிய ஈட்டற்கரிய. பொருள்கள்
இருக்குமிடத்தைக் கூறானாய் மறந்து. இறந்தொழிந்தனன். அப்பொருள்கள்
எங்கிருக்கின்றன என்று தம் வித்தையாலே அறிந்து கூறுவார் உளராயின்
அவர்கட்கு எங்கள் வேந்தன் தன் இன்னுயிரேனும் வழங்குவன் காண்'' என்று
தருசக மன்னவனுடைய மனத்தின்கண் உள்ள கருத்தையெல்லாம் ஊகித்துணர்ந்து
அறிவறிந்து மூத்தோனாகிய அவ்வாயிலோன் வகுத்துக் கூறா நிற்ப;
என்க, |
|
(விளக்கம்) பயந்தோன்-ஈன்ற
தந்தை. படைத்த-ஈட்டிய. வெறுக்கை - செல்வம். அயர்த்து-மறந்துபோய்.
இகந்தொழிந்தனன் - இறந்து பட்டான். நன் மூதாளன்-அறிவறிந்த முதியோன்.
பன்னினன்-வகுத்து, |