பக்கம் எண் :

பக்கம் எண்:176

உரை
 
3. மகத காண்டம்
 
12.அமாத்தியர் ஒடுங்கியது
 
         
           வாரி மருங்கற வற்றினு மகவயின்
           நீர்வளஞ் சுருங்கா நெற்றித் தாரைக்
     15    கூவலும் பொய்கையுங் கோயில் வட்டத்
           தெவ்வழி வேண்டினு மவ்வழிக் காட்டும்
           ஞான வல்லியத் தரும்பொரு ணுனித்தனென்
 
           (உதயணன் கூறல்)
         13 - 17 : வாரி............நுனித்தனென
 
(பொழிப்புரை) அது கேட்ட உதயணன், ''வாயில் காவலனே ! கடல்
  ,அடி சுடும்படி நீர் வற்றிப் போகுமிடத்தும் தன்னுள் நீர் வளம் குறைதல்
  இல்லாத உச்சியிலே ஊற்றுக் கண்கனையுடைய நீர் ஊற்றுக்களையும்
  பொய்கைகளையும். இவ்வரண்மனை அகத்தின்கண் எவ்விடத்தே காட்டல்
  வேண்டினும் அவ்விடத்தே காட்டுதற்கு உரிய வித்தையாகிய 'ஞான வல்லியம்'
  என்னும் அரும் பொருளுடைய நூலை யான் கூர்ந்து பயின்றுள்ளேன்'' என்க,
 
(விளக்கம்) வாரி-கடல்- நெற்றித்தாரை-உச்சியின்கண்உள்ள நீர்
  ஊற்றுக்கண், கூவல்-கிணறு. கோயில்-அரண்மனை. 'ஞானவல்லியம்' - ஒரு
  மந்திர நூல்.