உரை |
|
3. மகத காண்டம் |
|
1. யாத்திரை போகியது |
|
பைந்தொடி
யரிவைக்குப் படுகடங் கழீஇய
கண்புரை யந்தணன் காள
வனத்தினின் 130 றுதய ஞாயிற்றுத்
திசைமுக நோக்கித்
திருமகட் டேரு மொருமையிற்
போந்து கருப்பாச
மென்னுங் கானக் கான்யாற்றுப்
பொரும்புன னீத்தம் புணையிற்
போகிச்
சேணிடைப் போகிய பின்றை யப்பால் 135
நீணிலைப் படுவிற் பேர்புணை
நீந்தி நொந்துநொந்
தழியு நோன்புபுரி யாக்கையர்
அருஞ்சுரக் கவலையு மடவியும்
யாறும் பெருஞ்சின
வீர ரொருங்குடன் பேர்வுழி |
|
(இதுவுமது) 128
- 138 ; பைந்தொடி...............பேர்வுழி |
|
(பொழிப்புரை) தீயின் மூழ்கி இறந்தொழிந்த தன் மனைவிக்குத் தான் செய்ய வேண்டிய
கடன்களைச் செய்து முடித்த கண் போன்ற சிறப்புடைய முனிவனாகிய இலாமயன்
இருந்த காளவனத்தினின்றும் தோன்றாநின்ற ஞாயிற்றுத்
தேவனுக்குரிய கீழ்த்திசையை நோக்கித் திருமகள் போல்வாளாகிய
வாசவதத்தையை ஆராய்ந்து காணும் ஒன்றுபட்ட கருத்தோடு சென்று
''கருப்பாசம்'' என்னும் காட்டின் கண்ணதாகிய காட்டியாற்றினது பெரிய
வெள்ளத்தைத் தெப்பத்தின் வாயிலாய் நீந்திச் சென்று அப்பால் வெகு
தொலைவு போய் பின்னர் எதிர்ப்பட்ட நீண்ட நிலைமையினையுடைய நீர்
நிலையாகிய மடுவினையும் இயங்காநின்ற தெப்பத்தாலேயே நீந்திக் கடந்து
இவ்வாறு ஆறு செல்லும் வருத்தத்தாலே நொந்து நொந்து
மெலியாநின்ற நோன்பினை மேற்கொண்ட உடம்பினையுடையராய்க் கடத்தற்கரிய
பாலை நிலத்துக் கவர்த்த நெறிகளினும் காட்டினூடும்
யாற்றுகளினும்சென்றுசென்று பெரிய வெகுளியையுடைய அவ்வீரர்கள் ஒருங்கு கூடிச்
செல்லும் பொழுதென்க. |
|
(விளக்கம்) முன்பு
(53-6) ''இன்மொழி விச்சை இலாமயன்'' என்றும் ?ஆளவி நெஞ்சத்து
அந்தணன் இருந்த காளவனமும் வெந்தீப்புக்கது '' என்றும் அமைச்சர்
வாசவதத்தை தீயிலிறந்தமைக்கு வருந்தியிருந்த உதயணனுக்கு எடுத்துக்காட்டித்
தேற்றினமை கண்டாம். ஈண்டுப் பைந்தொடி அரிவைக்குப் படுகடங் கழீஇய
கண்புரை அந்தணன் என்றமையாலே காளவனம் தீப்புக்குழி அத்தீயின் மாண்ட
தன்மனைவிக்குக் கடங்கழித்திருந்த காளவனம் என்பதும் பெற்றாம்.
ஞாயிற்றுத் திசை என்றது-கீழ்த் திசையை. திருமகள்-ஈண்டு வாசவதத்தை.
கருப்பாசம் யாறு என்க. கானக் கான்யாறென்புழிக் கான் அடை
மாத்திரையாய் நின்றது. படு - மடு. |