உரை |
|
3. மகத காண்டம் |
|
12.அமாத்தியர் ஒடுங்கியது |
|
றன்றியு
மதனது நன்றி நாடின் 60 நாவிற்கு
மினிதாய்த் தீதற வெறியும்
தன்மையு நுண்மையுந் தமக்கிணை
யாவன தெண்ணீ
ரெவ்வழித் தேரினு மில்லை
புகழ்வரை மார்பிற் பூந்தா
ரண்ணல் அகழும்
பொழுதி னிகழ்வ கேண்மதி |
|
(இதுவுமது)
59 - 64 :
அன்றியும்............கேண்மதி |
|
(பொழிப்புரை) பின்னரும் வேந்தே, ''அந்நீரினது நன்மையை ஆராயுங்கால் அது நாவிற்கும்
இனியதாய் உடலிலுள்ள பிணி அற்றுப் போம்படி தீர்க்கின்ற குளிர்ச்சி
உடைமையும் நுண்மையும் உடையதாயிருக்கும். அதற்கு ஒப்பான தெளிந்த நீர்
இவ்வரண்மனையகத்தில் எவ்விடத்தில் ஆராய்ந்து காணினும் இல்லையாகும்,
புகழ்தற்குரிய. நல்லிலக்கணம் அமைந்த மார்பினையும் பொலிவுடைய மலர்
மாலையையுமுடைய அண்ணலே! இக் கூவலைத் தோண்டும்பொழுது
நிகழ்வனவற்றை யான் இப்பொழுதே கூறுவன் கேட்டருள்க'' என்க. |
|
(விளக்கம்) அதனது -
அந்நீரினது. .நன்றி - நன்மை. தீது - பிணி. நுண்மை-நுண்ணிதான தன்மை.
தமக்கு ; ஒருமை பன்மை மயக்கம், வரை - இரேகை; மலைபோன்ற மார்புமாம்.
கேண்மதி - மதிமுன்னிலையசை. |