பக்கம் எண் :

பக்கம் எண்:184

உரை
 
3. மகத காண்டம்
 
12.அமாத்தியர் ஒடுங்கியது
 
         
           துரைப்பக் கேட்டே யோங்கிய பெரும்புகழ்த்
           திரும்பே ருலகம் பெற்றோன் போல
           அகழ்வினை யாளரை யவ்வயிற் றரீஇ
           இகழ்வி லத்தொழி லிறைவ னேவப்
 
          தருசகன் செயல்)
                76 - 79 ; ஓங்கிய............ஏவ
 
(பொழிப்புரை) அத்தருசக மன்னன் உயர்ந்த பெரிய புகழை
  யுடைய மேனிலை உலகத்தை அடைந்தவன் போலப் பெரிதும்மகிழ்ந்து
  அப்பொழுதே அவ்விடத்தே கூவல்தோண்டும்தொழிலாளரை வரவழைத்துத்
  தன்னாற்பெரிதும்பேணப்படுகின்ற அத்தொழிலின்கண்ஏவா நிற்ப என்க.
 
(விளக்கம்) ஓங்கிய பெரும்புகழ்த்திருப்பேருலகம்என்றது சித்தபதவியை.
  அகழ்வினையாளர்- கூவல்தோண்டும் தொழிலாளர். இறைவன்- தருசகன்