பக்கம் எண்:186
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 13. கோயில் ஒடுங்கியது | | கரந்த
வுருவொடு காவல் புரிந்தவர்
ஒடுங்குதல் வலித்துடன் போகிய
பின்றை
முனைவெந் துப்பின் மன்னனு
முன்போல் புனைவகை
மாடம் புக்குமறைந் திருத்தலிற் | | 1 - 4: கரந்த,,,,,,,,,இருத்தலின | | (பொழிப்புரை) இவ்வாறு
உதயண குமரனைப் பாதுகாத்து வந்த உருமண்ணுவா முதலியோர் அரண்மனைக்கண்
மறைந்துறைதலைத் துணிந்து சென்ற பின்னர்ப் போரின்கண் வெவ்விய
ஆற்றலுடைய உதயண மன்னனும் பண்டு போல ஒப்பனை செய்யப்பட்ட மன்மதன்
கோயில் மாடத்தின்கண் புகுந்து மறைந்திருத்தலாலே; என்க, | | (விளக்கம்) காவல்புரிந்தவர்-உருமண்ணுவா முதலியோர். முனைவெந்துப்பு - போரின்கண்
வெவ்விய ஆற்றலுடைய. மன்னன்- உதயணன். மாடம் - மன்மதன் கோயின்
மாடம், |
|
|