பக்கம் எண் :

பக்கம் எண்:187

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
         
      5    றண்டடு திண்டோட் குருசிலைத் தன்னொடு
           கொண்டுட் போகுங் குறிப்பின ளாகித்
           தீது தீண்டாத் தெரிவொடு புகுதரும்
           வாயி னாடி வைய நீக்கிப்
           பல்வகைத் தான நல்குக மின்றென
     10    எல்லிற் போதர லியையு மாதலிற்
           சிலத மாக்களொடு சிவிகை வருகென
 
                (பதுமாபதியின் செயல்)
                5 - 11: தண்டு.........வருகென
 
(பொழிப்புரை) பதுமாபதி நங்கை தண்டெனத் திரண்ட தோளையுடைய
  உதயணனை மன்மதன் கோயிலிலிருந்து தன்னோடு கன்னிமாடத்திற்குக்
  கொண்டு போகும் ஒரு கருத்தினை உடையளாய் அங்ஙனம் கொண்டு
  போகும்பொழுது தமக்குத் தீங்கு நேராதபடி கன்னிமாடத்தே புகுதற்குரிய
  வழி வகைகளை ஆராய்ந்துணர்ந்து அதற்கேற்ப அற்றை நாள் தான்
  வண்டியிற் போதலைத் தவிர்த்துத் தன் ஆய மகளிரை நோக்கி யாம் இற்றை
  நாள் மன்மதன் கோயிலின்கண் பல்வேறுவகைத் தானங்களையும் வழங்குவோம்.
  அதன்பொருட்டு பகற்பொழுதிலேயே போதல் வேண்டுமாதலின் சிவிகை
  சுமப்பவரோடு சிவிகையும் வருவதாக என்று வரவழைத்துக்கொண்டு என்க.
 
(விளக்கம்) தண்டு-ஒருவகைப் படைக்கலம். குருசில்-உதயணன். தீது-துன்பம்;
  அம்பலும் அலரும் ஆகிய குற்றமுமாம்.தெரிவொடு நாடி என்க. வாயில்-வழி.
  வையம்-வண்டி. எல்-பகல். சிலதமாக்கள் - ஈண்டுச் சிவிகைகாவும் பணிமாக்கள்.