உரை |
|
3. மகத காண்டம் |
|
13. கோயில் ஒடுங்கியது |
|
அலர்ததை
யைம் பா லணியிழை யேறிப்
போந்தன ளாகிப் பூந்தண்
கானத்துள்
எழுதுவினை மாடத்து முழுமுத லிழிந்து 15
தாமகத் திருக்கு மாமணிப்
பேரறை வாயில்
சேர்வுற வையம்
வைக்கென அமைத்தன
ளாகி யவ்வயி
னொடுங்கிடு சினப்போ
ரண்ணலொடு வளப்பா டெய்தி
அப்பகல் கழிந்த பின்றை
மெய்ப்பட |
|
பதுமாபதி மன்மதன் கோயிலை யடைந்து
உதயணனைக்
காண்டல்)
12-19: அலர்.........பின்றை |
|
(பொழிப்புரை) மலர்செறிந்த கூந்தலையும் அழகிய அணிகலன்களையு முடைய அக்கோமகள்
அச்சிவிகையின்கண் ஏறிச்சென்று மலர்மிக்க குளிர்ந்த பொழிலின்கண்
அமைந்துள்ள எழுதுவினை மாடத்தின் பெரிய முகப்பின்கண் இறங்கித்தானும்
உதயணனும் அகத்தில் இருப்பதற்குரிய சிறந்த மணிகள் பதித்த பெரிய
அறையின் வாயிலைப் பொருந்தும்படி அச்சிவிகையை வைக்கும்படி கட்டளை
இட்டவளாய் அவ்விடத்தே இறங்கி முன்னரே அப்பேரறையின்கண்
மறைந்திருக்கின்ற வெகுளிமிக்க பேராற்றலுடைய அவ்தயணகுமரனைக் கண்டு
பெரிதும் அளவளாவி மகிழ்ந்து அந்தப் பகல் கழிந்த பின்னர்;
என்க. |
|
(விளக்கம்) அலர்-மலர்.
ததைஐம்பால்-வினைத்தொகை. அணியிழை- பதுமாபதி. எழுதுவினை மாடம்-ஓவியம்
வரைந்துள்ள மண்டபம். தாம்-உதயணனும் தானும். வையம்-ஈண்டுச்சிவிகை.
அண்ணல்-உதயணன், வளப்பாடு-மகிழ்ச்சி. |