பக்கம் எண் :

பக்கம் எண்:189

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
           அப்பகல் கழிந்த பின்றை மெய்ப்பட
     20    மாண்டரு கிளவி பூண்ட நோன்பிற்
           கன்றுகடை யாதலிற் சென்றோர் யார்க்கும்
           மணியு முத்தும் பவழமு மாசையும்
           அணியு மாடையு மாசி லுண்டியும்
           பூவு நானமும் பூசுஞ் சாந்தமும்
     25    யாவை யாவை யவையவை மற்றவர்
           வேண்டே மெனினு மீண்ட வீசலின
 
             (பதுமாபதி தானமளித்தல்)
            19-26 : மெய்ப்பட............ வீசலின்
 
(பொழிப்புரை) மெய்ப்பாடுண்டாக மாட்சிமை பொருந்திய
  மொழிகளையுடைய அப்பதுமாபதி மேற்கொண்டுள்ள காமவேள்
  நோன்பிற்கு அற்றைநாள் இறுதிநாள் ஆதலால் அங்குவந்தோர்
  யாவர்க்கும் மணியும் முத்தும் பவழமும் பொன்னும் அணிகலன்களும்
  ஆடைகளும் குற்றமற்ற நல்லுணவும் மலரும் கத்தூரியும் பூசுஞ் சந்தனமும்
  ஆகிய இப்பொருள்களுள் வைத்து யார் யார் எந்த எந்தப் பொருளை
  விரும்பினாலும் மற்று அவர்தாம்  எங்கட்கு இவைபோதும் இனிவேண்டேம்
  என்றாலும் நிறுத்தாமல் நிரம்ப அள்ளி வழங்குதலாலே; என்க.
 
(விளக்கம்) மெய் - மெய்ப்பாடு. நோன்புமேற்
  கொண்டோர்க்குரிய மெய்ப்பாடு என்க. மாண்டகு கிளவி-பதுமாபதி.
  கடை - இறுதிநாள். மணி - மாணிக்கம். மாசை - பொன். நானம் -
  கத்தூரி ஈண்ட - நிரம்ப. வீசலின் - வழங்குதலாலே.