பக்கம் எண்:19
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 1. யாத்திரை போகியது | | வென்றடு
சிறப்பின் வீணை வித்தகன். 140
ஒன்றிய தேவியை யுள்குவன னாகிச்
செறிந்த மருங்கிற் றிரிமருப்
பிரலை புறந்தற்
காப்பப் புணர்மறி தழீஇய
மடமா னம்பிணை கண்டு மாதர் | | (உதயணன் மான் முதலியவற்றைக்
கண்டுழிப்
புலம்பல்)
139 - 143 ; வென்று,,,,,,,,,,,,கண்டு | | (பொழிப்புரை) பகைவரை நேர் நின்று .பொருது கொன்று வெல்லும் சிறப்பினையும், யாழ்ப்
புலமையையும் உடையவனாகிய உதயணமன்னன் நெறியின் கண்ணே காடு
செறிந்த பக்கத்தே முறுக்கி விட்டாலொத்த கொம்பையுடைய கலைமான் தன்
பக்கத்தே நின்று தன்னைப் பாதுகாவா நிற்பத் தன்னைக் கூடி நிற்கும் தனது
குட்டியை அன்போடு தழுவி நின்ற மடப்பமுடைய அழகிய பிணைமானைக் கண்டு
தன்னோடு அன்பாலொன்றிய தன் தேவியாகிய வாசவதத்தையை
நினைவானாகி என்க. | | (விளக்கம்) மருங்கில்
- பக்கத்தே, திரி மருப்பு - முருக்கிவிட்டாற் போன்ற கொம்பு,
இரலை-ஆண்மான். பிணை - பெண்மான். வித்தகன் பிணைமான் கண்டு தேவியை
உள்குவனனாகி என மாறி இயைத்துக் கொள்க. பிணைமான் தன்நோக்கத்தாலே
வாசவதத்தையின் நினைவை எழுப்புதலாலே உதயணன் தேவியை
உள்கினன் என்பது கருத்து. மறி -குட்டி. |
|
|