பக்கம் எண் :

பக்கம் எண்:190

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
           இந்நில வரைப்பிற் கன்னியர்க் கொத்த
           ஆசி லாசிடை மாசில மாண்பின்
           மந்திர நாவி னந்த ணாளரும்
     30    அல்லோர் பிறருஞ் சொல்லுவனர் போயபிற்
           கோலக் காமன் கோட்டத் தகவயின்
           மாலை யாமத்து மணிவிளக் கிடீஇ
           மோகத் தான முற்றிழை கழிந்தபின்
 
               (இதுவுமது)
     27-33 : இந்நில,,,,,.,,,கழிந்த பின்
 
(பொழிப்புரை) அத்தானங்களை ஏற்றுக்கொண்ட மந்திரம்
  பயின்ற செந்நாவினையுடைய அந்தணரும் இவ்வுலகத்தின்கண்
  கன்னிமகளிருக்கு ஏற்ற குற்றமற்ற வாழ்த்துக்கள் பலவும்கூறி
  வாழ்த்திச் செல்லா நிற்ப அவ்வந்தணரல்லாத பிற இரவலர்களும்
  வாழ்த்துக்கூறி மகிழ்ந்து போன பின்னர், அழகுடைய அக்காமன்
  கோட்டத்தினுள் முதல்யாமத்திற்கு ஏற்றும் மணி விளக்கை ஏற்றிக்
  காண்போர் காமுறும் தானங்களை அப்பதுமாபதி செய்து முடித்த
  பின்னர்; என்க,

 
(விளக்கம்) ஆசிடை-வாழ்த்து, ,கன்னியர்க்கு
  ஒத்தவாழ்த்தாவது-சிறந்த கணவனை எய்துக என்பதாம், மாசு
  இல்லாதனவும் ஆகிய மந்திரம் என்க, கோலம் - அழகு,
  மாலையாமம்-முதல்யாமம். இடீஇ-இட்டு ஏற்றி என்க. மோகித்தற்குரிய
  தானம் என்க.
  சிறந்த கணவன் தன்னை மோகித்தற் பொருட்டு வழங்கும் தானம்
  என்றபடி. முற்றிழை - பதுமாபதி.