உரை |
|
3. மகத காண்டம் |
|
13. கோயில் ஒடுங்கியது |
|
மரபறி
மகளிர் பற்றினர் பாடக் 35 கரும
மமைந்தபிற் கடிமனை புகீஇயர்
திருமதி முகத்தியைச் சேர்ந்து கைவிடாஅ
அருமதி நாட்டத் தந்தணி
போந்து பட்டினிப்
பாவை கட்டழ லெய்தும்
நீங்குமி னீரெனத் தான்புற நீக்கிப் |
|
(பதுமாபதி உதயணனுடன்
செல்லுதல்)
34-39 ; மரபு.............நீக்கி |
|
(பொழிப்புரை) மரபு அறிந்த
மகளிர்கள் பண்புடையோராய் காமவேளைப் பாடிப் பரவி அவ்வழி பாட்டுத்
தொழில் முடிந்த பின்னர் அரண்மனைக்குச் செல்லும் பொருட்டுத்
திங்கள் மண்டிலம் போன்ற முகத்தையுடைய அப்பதுமாபதியை எப்பொழுதும்
அணுகியிருந்து கைவிடாமற் காப்பாற்றும் இயல்புடைய அரிய அறிவும்
நோக்கமும் உடைய பார்ப்பனியாகிய யாப்பியாயினி வந்து அங்குக் குழுமியுள்ள
மகளிரை நோக்கி நங்கோமகள் பட்டினி விட்டிருத்தலால் உடல் வெப்பம்
எய்துகின்றனள். ஆதலின் நீவிர் எல்லீரும் புறத்தே போமின்
என்று கூறி அம்மகளிரைப் போக்குவித்து: என்க. |
|
(விளக்கம்) மரபு-பாடும்
மரபு. பற்றினர்-அன்புடையோர். கருமம் - வழிபாட்டுச் செயல். புகீஇயர்-
புகுவதற்கு. மதிமுகத்தி- பதுமாபதி. நாட்டம் - நோக்கம். அந்தணி -
யாப்பியாயினி. பட்டினிப்பாவை-பதுமாபதி, |